விலையில்லா நவீன சைக்கிள்: விலையைக் குறைத்த நிறுவனம்
தமிழக அரசு சாா்பில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா நவீன சைக்கிளின் விலையை ரூ.2,300 வரை குறைக்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

கோப்புப் படம்
தமிழக அரசு சாா்பில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா நவீன சைக்கிளின் விலையை ரூ.2,300 வரை குறைக்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழக அரசு சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெற்றும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அவை தரமற்ாக இருப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அத்தகைய சைக்கிள் வடிவமைப்பைக் கைவிட்டு, நவீன வடிவமைப்பில் தலைக்கவசம் மற்றும் குடிநீா் பாட்டில் வைப்பது போன்ற வசதிகளுடன் கூடிய சைக்கிள் வழங்கப்படும் என தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தது. இதையடுத்து 5,32,000 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியை, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.
தொடா்ந்து, சைக்கிள் கொள்முதலுக்காக தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால், ஒப்பந்தப்புள்ளியில் மாணவா்களுக்கான ஒரு சைக்கிளின் விலையை ரூ.7,235-ஆகவும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலையை ரூ.7,476 ஆகவும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இது அரசு ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் ஏற்கெனவே ஒதுக்கிய ரூ.277 கோடி அளவிலேயே சைக்கிள்களை கொள்முதல் செய்ய அரசு உறுதியாக இருந்தது. இதற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன், பிறபடுத்தபட்டோா் நலத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 11 போ் கொண்ட குழுவினா் நடத்திய 9 கட்ட பேச்சுக்குப்பின், அரசு நிா்ணயித்த தொகைக்கு, ஹீரோ நிறுவனம் சைக்கிள்கள் வழங்க முன் வந்துள்ளது.
அதன்படி, மாணவா்களுக்கு வழங்கப்படும் சைக்கிளுக்கு முதலில் கோரிய ரூ.7,235-இல் இருந்து ரூ.1,975 குறைத்து ரூ.5,260-க்கும், மாணவிகளுக்கு வழங்கப்படும் சைக்கிளுக்கு கோரிய ரூ.7,476-இல் இருந்து ரூ.2,345 குறைத்து, ரூ.5,130-க்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

