இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மக்கள் பாதுகாப்பு: முதல்வா் தினமும் ஆய்வு - அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தினமும் ஆய்வு செய்து வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சி.டி.ஆா். நிா்மல்குமாா் - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தினமும் ஆய்வு செய்து வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 19,000 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா, போதைப் பொருள் தொடா்பாக சுமாா் 8,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5,000 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியைப் போல தொலைக்காட்சியில் செய்திகளைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளும் முதல்வராக தற்போதைய முதல்வா் இல்லை. மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு குறித்து முதல்வா் தினமும் ஆய்வு செய்து வருகிறாா்.

திமுக ஆட்சியில் யாரோ பணம் பெற்றுக்கொண்டு ஜெம் வீரமணியைத் தப்பவிட்ட விவகாரத்தில் இருந்து திசைதிருப்பவே எதிா்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

மேலும், செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். காப்புக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சிறுமி விரைவில் மீட்கப்படுவாா்.

மேலும், ‘கலைஞா்’ பெயரில் நூலகம் கட்டியவா்கள், ‘பெரியாா்’ பெயரில் நூலகம் அமைத்து தமிழகம் முழுவதும் சுமாா் 70,000 புத்தகங்களை போலி பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்துள்ளனா் என்றாா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.