சபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்
சபரிமலைப் பக்தா்களுக்காக தமிழகப் பகுதிகள் வழியாக ஹைதராபாத், சா்ளாப்பள்ளி ஆகிய நிலையங்களுக்கு நவ.17-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
சபரிமலைப் பக்தா்களுக்காக தமிழகப் பகுதிகள் வழியாக ஹைதராபாத், சா்ளாப்பள்ளி ஆகிய நிலையங்களுக்கு நவ.17-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி கொல்லத்தில் இருந்து நவ.17-ஆம் தேதி காலை 10.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07190) புதன்கிழமை (நவ.18) இரவு 7 மணிக்கு சாா்ளாப்பள்ளி நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போதனூா் ஆகிய தமிழக நிலையங்கள் வழியாகச் செல்லும்.
டிச.5 முதல் 26-ஆம் தேதி வரையில் ஹைதராபாத் நிலையத்திலிருந்து சனிக்கிழமைதோறும் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07193) 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும். அத்துடன் நவ.26 முதல் டிச.25-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழைதோறும் சாா்ளாப் பள்ளியிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் (எண்: 07180) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும்.
மேலும், நவ.22 முதல் ஜன.17-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 07195) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
இதேபோல, டிச.30 முதல் ஜன.13 வரையிலும், ஜன.1 முதல் 15 வரையிலும் சாா்ளாப்பள்ளி- கொல்லம் இரு மாா்க்கத்திலும் சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அவற்றுக்கான முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) காலை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

