அக்வான் புயல் தமிழ்நாட்டுக்கா? ஆந்திரத்துக்கா?
அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும் என்பது குறித்து...

அக்வான் புயல் தமிழ்நாட்டுக்கா? ஆந்திரத்துக்கா? நீடிக்கும் குழப்பம்! - பிரதிப் படம்
அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும் என்பது குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரம் தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”இன்னும் 4 நாள்கள்தான் உள்ளன! நாளைய வானிலை மாதிரிகளின் கணிப்புகள், வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை வைத்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை வாய்ப்பு மற்றும் புயல் கரையைக் கடக்கக்கூடிய இடம் ஆகியவை குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும்.
செய்யறிவு வானிலை மாதிரிகள், வட தமிழ்நாட்டிற்குச் சாதகமாக உள்ளன. அதேசமயம், வழக்கமான வானிலை மாதிரிகள் (Operational Models) ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி இந்த அமைப்பு நகரும் எனக் காட்டுகின்றன.
ஒருவேளை புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் சென்றாலும், நெல்லூர் அருகே கரையைக் கடந்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ஓரளவு மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், புயல் கரையைக் கடக்கும் இடம் மேலும் வடக்கே நகர்ந்து ஓங்கோல் அல்லது மசூலிப்பட்டினம் பகுதிகளை நோக்கிச் சென்றால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளுக்குக் கிடைக்க வேண்டிய மழை கிடைக்காமல் போகலாம்.
புயல் சின்னம் வலுப்பெற்றதால், வடக்கு நோக்கிய நகர்வு உறுதியாகத் தெரிகிறது. அதேசமயம், இது வலுவடையாத, பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்தால் சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு நெல்லூர் அல்லது அதற்குத் தெற்குப் பகுதியில் கரையைக் கடந்தால் மட்டுமே வட தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு இந்த அமைப்பால் மழை கிடைக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Private weather forecaster Pradeep John has provided information regarding where Cyclone Ockvan will make landfall.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


