திருத்தணி கோயிலில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி!
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததைத் தொடர்ந்து, திருத்தணியில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது குறித்து...

முருகனுக்கு பஷ்பாஞ்சலி - எக்ஸ்
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததைத் தொடர்ந்து, திருத்தணியில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணி தவிர திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்த நிலையில், திருத்தணியில் மட்டும் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
கடும் சினம் கொண்டு சூரனை வதம் செய்துவிட்டு சாந்தமடைவதற்காக திருத்தணி மலை மீது முருகன் அமர்வதாக கூறப்படுகிறது. இதனால் திருத்தணியில் சூரசம்ஹாரத்துக்கு பதிலாக காவடி மண்டபத்தில் உள்ள முருகனுக்கு அந்த நேரத்தில் இருந்து புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
முன்னதாக, கந்த சஷ்டி விழாவின் 6 ஆம் நாளான இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, முருகனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை (நவ. 16) சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
Summary
Pushpanjali offered to Lord Murugan at the Tiruttani temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


