மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

திருத்தணியில் தியேட்டர் ஊழியர் வெட்டிக் கொலை: சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருத்தணியில் தியேட்டர் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Theater employee hacked to death in Tiruttani

திருத்தணியில் தியேட்டர் ஊழியர் வெட்டிக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் - டிஎன்எஸ்

Published On :

திருத்தணி: திருத்தணியில் தியேட்டர் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், ஏர்கன் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (எ) ராஜா(46), சன்னதி தெருவில் உள்ள தனியார் சினிமா திரையரங்கில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி துர்கா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

யுவராஜின் மகள், தாழவேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்த சிறுவனையும், யுவராஜின் மகளையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக யுவராஜின் மனைவி துர்கா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் லாரன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், லாரன்ஸ் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த சுசில் என்பவர், தனது நண்பர்களான புவனேஷ், ஹரீஷ் ஆகிய இருவரும் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த 4 ஆம் தேதி மாலை குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு யுவராஜ் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்த வந்த மர்ம கும்பல், யுவராஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலியன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை ஆய்வு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த சுசில் (24), அரக்கோணம் பள்ளூர் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (21), ஹரிஷ் (18), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த லாரன்ஸ்(31), அவரது சகோதரர் சுகில்(27), சுகில் மனைவி ரோஸி(25) ஆகியோருடன் சேர்ந்து, யுவராஜ் மகளுடன் பேசி வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். அத்துடன், யுவராஜ் மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுசில் சுங்குவார்சத்திரத்தில் தங்கியிருந்து வீடியோ கால் மூலம் யுவராஜின் வீட்டை அடையாளம் காட்டி, புவனேஷ் மற்றும் ஹரிஷை கொலை செய்ய அனுப்பியது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் ஒரு ஏர்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் கைது செய்ய முயன்றபோது, தப்பியோட முயன்ற சுசிலுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Theater employee hacked to death in Tiruttani: 4 arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.