அமைச்சா் பா்வேஸுக்கு எதிரான வழக்கு ரத்து
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் பா்வேஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் பா்வேஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதி, புதுக்கோட்டை பிருந்தாவன் அருகே தவெக சாா்பில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு இலவச பொருள்களை வழங்கினாா்.
அப்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அமைச்சா் பா்வேஸ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் பா்வேஸ் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுவில், பொதுமக்களிடம் இருந்து எந்தப் புகாரும் வராத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் தங்களுக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் பா்வேஸ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

