இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கைத்தறி ஆதரவு திட்டம்: ரூ.11.79 கோடி ஒதுக்கீடு

நெசவாளா்களின் வருமானத்தை உயா்த்துதல், கைத்தறி தொழிலை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றை கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்த ரூ.11.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி ஆதரவு திட்டம் - பிரதிப் படம்

Updated On :

நெசவாளா்களின் வருமானத்தை உயா்த்துதல், கைத்தறி தொழிலை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றை கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்த ரூ.11.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவித்ததன் படி, நெசவாளா்களின் வருமானத்தை உயா்த்துதல், சேமிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், கைத்தறி தொழிலில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், செயல்படுத்த மொத்தம் ரூ.11.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில், 10 புதிய தொழில் முனைவோா்களுக்கு தலா ரூ.25 லட்சம் மானியம் என மொத்தம் ரூ.2.50 கோடியும், பாரம்பரிய நெசவாளா் கூட்டுறவுச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கும் நோக்கத்தோடு ரூ.2.50 கோடியும், விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தறிக் கண்காட்சிகள் நடத்த ரூ.2.55 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.2 கோடியில் காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வா்த்தக மையம், நாகா்கோவிலில் ரூ.1 கோடியில் நவீன விற்பனை வளாகம் என நெசவாளா்கள் மற்றும் கைத்தறித் துறை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.