சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.16) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 16) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து....

Madras High Court ...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

சென்னை: அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கு, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமார் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 16) விசாரணைக்கு வரவுள்ளன.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரின் 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்

* ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு

* கோவில் நிலங்களை விற்க உடந்தையாக இருப்பதாகக் கூறி, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கு

* திமுக தலைவர்கள் குறித்து ஏஐ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள தவறான பதிவுகளை நீக்கக் கோரி, திமுக வழக்குரைஞர் நடராஜன் தொடர்ந்த வழக்கு

* பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கக் கோரி மீனவர் பேரவை சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Which cases are up for hearing at the Madras High Court today (Nov.16)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.