ஊழலுக்கு பரிகாரம் கூறுவது நீதியரசர்களின் வேலை அல்ல: சு. வெங்கடேசன் எம்.பி.
ஊழலுக்கு பரிகாரம் கூறுவது நீதியரசர்களின் வேலை அல்ல என சு. வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்பது...

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் - எக்ஸ்
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நவ.11 ஆம் தேதி எழுத்தாளர் பி.சுவாமிநாதன் எழுதிய "மகா பெரியவா" பாகம் 16 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது, இந்த புத்தகம் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டவை அல்ல. உண்மையான ஆன்மிக அனுபவங்களை உள்வாங்கி எளிய நடையில் எழுதப்பட்டவை.
நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் ஊழல் பாவம் கழிய வேண்டுமென்றால், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்." அப்போதுதான் அந்த பாவம் போகும் என தான் நம்புவதாக நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறினார்.
இந்த நிலையில், நீதிபதி சுவாமிநாதனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன். எம்.பி. விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதள பக்க விமர்சன பதிவில்,
"பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை.
சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
It is not the job of judges to suggest remedies for corruption: MP Su. Venkatesan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

