ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசு: சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
போராட்டக்காரர்களை கைது செய்ததன்மூலம், ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெரிப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்திருப்பது குறித்து...

சிபிஎம் மூத்த தலைவர்களை கைது செய்தபோது... - படம் - எக்ஸ்
போராட்டக்காரர்களை கைது செய்ததன்மூலம், ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெரிப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று (அக். 10) தெரிவித்துள்ளார்.
தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற இருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற சிபிஎம் மூத்த தலைவர்கள், எம்.ஏ. பேபி, பிரிந்தா காரத், ஷைலஜா, ஜான் பிரிட்டாஸ் எம்.பி., பினராயி விஜயன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது மத்திய அரசு!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, புதுதில்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, தில்லி காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் கடும் கண்டனத்திற்குரியவை.
ஜனநாயகத்தில் அரசிடம் கேள்வி கேட்பதும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுவதும் மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள். அந்த உரிமைகளைப் பயன்படுத்த முன்வரும் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரை ஆங்காங்கே கைது செய்வதும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், உ. வாசுகி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட தலைவர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவல்துறை வாகனத்திலேயே வைத்துச் சுற்றி வருகின்றனர் .
சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. கேள்வி கேட்பவர்களைக் கைது செய்வதன் மூலம் தேர்தல் ஆணையர் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்தையும் அமைதியான போராட்ட உரிமையையும் மதிக்க வேண்டிய மத்திய அரசு, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது .
கைது செய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களையும், மாணவர்களையும், போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் குரலை அடக்க நினைப்பவர்கள் வரலாற்றின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும். போராட்டங்களை ஒடுக்குவதால் மக்களின் கேள்விகளையும் உரிமைக் குரல்களையும் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
à®à¯à®²à¯à®²à®¿à®¯à®¿à®²à¯ à®à®©à®¨à®¾à®¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à¯à®°à®²à¯à®µà®³à¯à®¯à¯ நà¯à®°à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®±à®¿à®¯ à®à®°à®à¯!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 10, 2026
தலà¯à®®à¯à®¤à¯ தà¯à®°à¯à®¤à®²à¯ à®à®£à¯à®¯à®°à¯ à®à®¾à®©à¯à®·à¯ à®à¯à®®à®¾à®°à¯à®ªà¯ பதவி நà¯à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®¯ வலியà¯à®±à¯à®¤à¯à®¤à®¿, பà¯à®¤à¯à®¤à®¿à®²à¯à®²à®¿ à®à®¨à¯à®¤à®°à¯ மநà¯à®¤à®°à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯ நà®à¯à®ªà¯à®±à®µà®¿à®°à¯à®¨à¯à®¤ பà¯à®°à®¾à®à¯à®à®¤à¯à®¤à¯à®¤à¯ தà®à¯à®à¯à®, à®à¯à®²à¯à®²à®¿ à®à®¾à®µà®²à¯à®¤à¯à®±à¯à®¯à¯à®®à¯ தà¯à®£à¯ ராணà¯à®µà®ªà¯ பà®à¯à®¯à®¿à®©à®°à¯à®®à¯ à®à®à¯à®à®µà®¿à®´à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯à®³à¯à®³â¦ pic.twitter.com/am0Crm9Qs3
Summary
Lok Sabha Member Su. Venkatesan stated today (Oct. 10) that by arresting the protesters, the Central Government is strangling the voice of democracy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

