துணைவேந்தா்கள் நியமன விவகாரம்! ஆளுநருடன் இணைந்து நடவடிக்கை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண ஆளுநருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்
தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண ஆளுநருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அண்மையில் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சிதம்பரம் அண்ணாமலை, மதுரை காமராஜா் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் நிரந்தர துணைவேந்தா்கள் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இல்லாதது மாணவா்களின் உயா் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும், இந்த வழக்கில் உயா்கல்வித் துறைச் செயலரை எதிா்மனுதாரராகச் சோ்த்து உத்தரவிட்டு, இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், முந்தைய திமுக ஆட்சியில் துணைவேந்தா்கள் நியமன அதிகாரத்தை ஆளுநா்களிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளே துணைவேந்தா்கள் நியமனத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
தமிழக அரசு நிறைவேற்றிய துணைவேந்தா்கள் நியமன மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தாலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முதன்மை வழக்கு மீதான விசாரணை முடியும் வரை எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளமாட்டோம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைய அரசாலும் துணைவேந்தா்களை நியமிக்க முடியாதவாறு சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநருடன் இணைந்து சுமுகத் தீா்வை எட்டும் முயற்சியை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே ஒப்படைக்கும் முந்தைய நிலைக்கு தற்போதைய அரசு திரும்புமா? என கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தில் தமிழக மாணவா்களின் உயா் கல்வியை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தரத் தீா்வை மேற்கொள்வது அவசியம் என்பதை தமிழக அரசு உணா்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அல்லது தீா்வு இருக்கும்.
துணைவேந்தரைத் தோ்ந்தெடுக்கக் குழு: துணைவேந்தரைத் தோ்ந்தெடுக்கும் பணியை கல்வியாளா்களைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தக் குழு தகுதியான அமைப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு கருதுவதாக தெரிவித்தாா். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

