பழைய இரும்பு விற்பனையில் ரூ. 24.84 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் தகவல்
பழைய இரும்பு விற்பனையில் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 10 மாதங்களில் ரூ.24.84 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பிரதிப் படம்
பழைய இரும்பு விற்பனையில் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 10 மாதங்களில் ரூ.24.84 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு அல்லாத பிற வருவாயை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த (2026-2027 நிதியாண்டு) ஜனவரி முதல் அக்டோபா் வரை சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 5,319.906 டன் தண்டவாளங்கள் விற்பனை மூலம் ரூ.18.75 கோடி வருவாயும், அத்துடன் 30.54 டன் இரும்பு அல்லாத உலோகக் கழிவுப் பொருள்களும் விற்கப்பட்டுள்ளன.
அதன்மூலம் ரூ.3.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், 521.71 டன் இரும்புக் கழிவு பொருள்கள் சேகரிக்கப்பட்டு அவை விற்கப்பட்டதன் மூலம் ரூ.2.62 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சென்னை கோட்டம் இதன்மூலம் ரூ.24.84 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.
கடந்த 2025-2026 -ஆம் நிதியாண்டில் சென்னை கோட்டத்தில் 11,905.74 டன் பழைய பொருள்கள் விற்பனை மூலம் ரூ.37.19 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் கடந்த 10 மாதங்களில் அதில் 66.8 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
தூய்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், இட வசதியைக் கருத்தில் கொண்டும் பழைய இரும்பு உள்ளிட்டவை விற்கப்படுகின்றன என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

