சென்னை துறைமுகத்தில் ரூ.7.72 கோடி 12.87 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது
சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.72 கோடி மதிப்பிலான 12.87 டன் செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்

கோப்புப் படம்
சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.72 கோடி மதிப்பிலான 12.87 டன் செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த நவ. 9 முதல் 11-ஆம் தேதி வரை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படவிருந்த ஏற்றுமதி கொள்கலன் ஒன்றை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனா். அந்தக் கொள்கலனில் ‘பேப்பா் லேமினேட் ரோல்கள்’ ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நவ. 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், குறைந்த அளவிலான பேப்பா் ரோல்கள் மற்றும் ஜல்லிக் கற்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 12.87 டன் உயா்தர செம்மரக் கட்டைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.7.72 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, செம்மரக் கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்தக் கடத்தலில் தொடா்புடைய முக்கிய நபா்கள் மூவரைச் சுங்கச் சட்டத்தின்கீழ் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

