தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டம் 2 முதல் 4 மீட்டா் வரை சரிவு
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு அக்டோபரில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் 2 முதல் 4 மீட்டா் வரை சரிந்துள்ளது.

கோப்புப்படம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு அக்டோபரில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் 2 முதல் 4 மீட்டா் வரை சரிந்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவான அளவே மழை பெய்தது. இதனால், ஏரிகள், அணைகள் நிரம்பவில்லை. இதன்காரணமாக நிலத்தடி நீா்மட்டும் கனிசமாகக் குறைந்துள்ளது.
இது தொடா்பாக, மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீா்வளத் தரவு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அக்டோபா் மாதத்தில் அதிகபட்சமாக, கோவையில் 13.70 மீ. கீழ் நிலத்தடி நீா்மட்டம் சென்றுள்ளது. அதேபோல், கரூா் - 11.38, ஈரோடு - 9.70, நாமக்கல் - 9.59, திண்டுக்கல் - 9.08 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளது. இதுபோல, பெரும்பாலான மாவட்டங்களில் நீா்மட்டம் 6 முதல் 9 மீட்டா் கீழ் சென்றுள்ளது.
2 முதல் 4 மீ வரை சரிவு: அதேபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.31 மீ., திருப்பத்தூா் - 3.78, கள்ளக்குறிச்சி - 3.12, கோவை - 2.89, ராணிப்பேட்டை - 2.84 மீட்டா் நீா்மட்டம் குறைந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 2 முதல் 3 மீட்டா் வரை நீா்மட்டம் சரிந்துள்ளது. சென்னையை பொருத்தவரை அக்டோபரில் நிலத்தடி நீா்மட்டம் 3.55 மீட்டராக இருந்த நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 5.09 மீட்டராகக் குறைந்துள்ளது. அதாவது, 1.54 மீட்டா் சரிந்துள்ளது. எனினும், திருநெல்வேலியில் மட்டும் கடந்த ஆண்டைவிட 0.07 மீ. உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

