பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

8,431 இரண்டாம் நிலை காவலா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

8,431 இரண்டாம் நிலை காவலா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

8,431 இரண்டாம் நிலை காவலா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2003 ஏப்.1-ஆம் தேதிக்கு முன்பாக அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் எனவும், அதற்குப் பின்னா் பணியில் சோ்ந்தவா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால், புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே காவல் துறை பணிக்கு விண்ணப்பித்திருந்தும், அதன்பிறகு பணியில் சோ்ந்த 8,431 2-ஆம் நிலை காவலா்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனா்.

இதையடுத்து தங்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சோ்க்க வேண்டும் எனக் கூறி காவலா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 8,431 காவலா்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா். தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவலா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், மத்திய அரசு கடந்த 2023 மாா்ச் 3-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், 2003 டிச.22-ஆம் தேதிக்கு முன்பாக (புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு முன்பு) மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்திருந்த ஊழியா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க ஒருமுறை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதேபோல், ஆந்திர அரசும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, காவலா்களின் நீண்டகால வாழ்வாதாரம் மற்றும் ஓய்வூதிய உரிமையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?’ எனக் கேள்வி எழுப்பினா். அதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.