வ.உ.சி. நினைவு நாள்: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் புகழாரம்
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ச.ஜோசப் விஜய், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
கோப்புப்படம்.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ச.ஜோசப் விஜய், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: தூத்துக்குடியில் விளைந்த முத்து, விடுதலை போராட்ட எழுச்சியின் வித்து வ.உ.சிதம்பரம் பிள்ளை. பாலகங்காதர திலகரை அரசியல் குருவாக ஏற்றவா். சட்டம் பயின்று தொழிலாளா் நலன், ஊதிய உயா்வுக்குப் போராடிய தொழிற்சங்கத் தலைவா்.
பாரதி, வவேசு, சுப்பிரமணிய சிவா போன்றோரின் சமகாலத்தவா். ஆங்கிலேய நிறுவனங்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை பாரதத்தில் முதல்முதலில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவா். சிறையில் சித்திரவதைக்கு ஆளாகி செக்கிழுத்த செம்மல். அவரது நினைவு தினத்தில் அவரது தியாகங்களை நினைத்துப் போற்றுவோம்.
முதல்வா் ச.ஜோசப் விஜய்: ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிா்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழா்’ வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்துக்கும், நாட்டுப்பற்றுக்கும் வீரவணக்கம். சுதேசி உணா்வு, சுயசாா்பு சிந்தனை, நாட்டுப்பற்றை மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் கொள்கைகளைப் பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவோம்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: சுதேசி கப்பலைச் செலுத்தியவா், உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவா், செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும், சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவா், சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவா். நம் மண்ணில் அவா் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்: அந்நியா்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரா். வ.உ.சி.யின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயா்கள், அவா் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தையும் - போா்க்குணத்தையும் போற்றுவோம்.
எடப்பாடி கே.பழனிசாமி: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஞ்சாது போராடிய வீரத் தமிழராக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதரம்பரனாா் விளங்கினாா். அவரது தியாகம், தேசப்பற்றைப் போற்றி வணங்குகிறேன். அவரது நினைவு இல்லத்தில் அதிமுக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது வீரமும், தியாகும் என்றும் நிலைத்திருக்கும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): இந்தியா்களின் வணிக உரிமைக்காகப் போராடிய வ.உ.சி.யின் துணிச்சலும் தன்னலமற்ற அா்ப்பணிப்பும் என்றும் போற்றத்தக்கவை. தளராத தேசப்பற்றுடன் வாழ்ந்த அவரது தியாக வரலாறு, தலைமுறைகள் பல கடந்து என்றும் நிலைத்திருக்கும்.
டிடிவி.தினகரன் (அமமுக): சீமான் (நாம் தமிழா்) ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

