திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் மறுசீரமைப்பு

திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் மறுசீரமைப்பு குறித்து...

@arivalayam

மு. க. ஸ்டாலின் - @arivalayam

Updated On :

திமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூகக் கட்டுமான அடிப்படையில் (சோசியல் என்ஜினீயரிங்) முறையில் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

திமுகவில் இதுவரை அமைப்பு ரீதியான தேர்தல் 15 முறை நடைபெற்றுள்ளது. இப்போது 16-ஆவது முறையாக உள்கட்சித் தேர்தலை நடத்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் உள்கட்சி சீரமைப்புப் பணிகளை மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார்.

கட்சி கட்டமைப்புகளை மறுசீரமைத்து அதன்பிறகு தேர்தல் நடத்தும் வகையில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின்படி அமைப்புரீதியாக மாவட்டங்கள் 77-இல் இருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிட்டார்.

ஒரு மாவட்டத்துக்கு அதிகபட்சம் 3 தொகுதிகள் வரை இடம்பெற்றுள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாவட்டச் செயலர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதால் மூத்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே, மாவட்டத்துக்காகப் பிரிக்கப்பட்ட தொகுதிகள் முறையாக இல்லை என்றும், குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே மாவட்டச் செயலராகப் பதவியை பிடிக்கும் வகையில் இந்தப் பட்டியல் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் புகார் மனு அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான நிர்வாகிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், கட்சி முன்னோடிகளை ஒவ்வொரு வருவாய் மாவட்டவாரியாக சென்னைக்கு வரவழைத்து உரிய ஆலோசனை நடத்தி மீண்டும் புதிய பட்டியலைத் தயாரித்து வருகின்றனர். எனவே, திருத்தப்பட்ட புதிய மாவட்டங்கள் பட்டியலை விரைவில் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.