ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கூட்டத்தில், தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த திமுக, கம்யூனிஸ்ட், விசிகவினா்.

Updated On :

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கூட்டத்தில், தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனா்.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகதத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரத்திக் தாயள் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அதிமுக, திமுக, தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக வாக்குச்சாவடிகளை அமைத்தல், சேதமடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றியமைத்தல், வாக்குச்சாவடிகளின் பெயா் மாற்றம், வாக்குச்சாவடிகளை இணைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, திமுக பிரதிநிதியான மேயா் மு. அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிச்செல்வன், விசிக ஜெயகுமாா் ஆகியோா் எஸ்ஐஆா் குளறுபடிகளுக்கு காரணமான தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து நடந்த கூட்டத்தில், நவ. 21, 22, 28, 29-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில், தகுதியான வாக்காளா்கள் தங்கள் பெயா்களை சோ்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.