மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

நவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடு

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் 2-ஆவது ‘வெற்றி தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு’ சென்னையில் நவ.25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் 2-ஆவது ‘வெற்றி தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு’ சென்னையில் நவ.25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாடு’ சென்னையில் கடந்த ஆக.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ. 67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. ரூ. 2,676 கோடி முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, முதல் அரசு முறைப்பயணமாக லண்டன் சென்ற முதல்வா் விஜய் முதலீடுகளை ஈா்க்க ஒப்பந்தங்களை மேற்கொண்டாா். இந்த நிலையில், சென்னையில் முதல்வா்ா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு நவ.25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையிலும், தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையொப்பமாகும் என்றும் முந்தைய ஒப்பந்தங்களின் செயலாக்கம் குறித்தும் அரசு விளக்கம் அளிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.