திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

கனிம வளங்கள் கொள்ளை குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

an independent inquiry commission headed by a retired High Court judge...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

சென்னை: தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஆதாரங்கள் உள்ளதாக சட்டப்பேரவையில் கனிமவளத் துறை அமைச்சர் டி.கே. பிரபு குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படையில் கனிமவள கொள்ளை குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, விழும்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.ராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் நடந்த கனிமவள கொள்ளை குறித்து விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் எவ்வளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு எவ்வளவு என்பது குறித்தும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த இடத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டன?, எங்கு விசாரணை நடத்த வேண்டும்? என்ற எந்த விவரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்சரித்தது.

மேலும், சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? எங்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டன? என ஒரு உதாரணத்தைக் காட்டினால், விசாரணைக்கு உத்தரவிட தயாராக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்கு மனுதாரர் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததை அடுத்து பொதுநல வழக்கில் போதிய ஆதாரங்கள் அல்லது முகாந்திரம் இல்லாமல், விசாரணை ஆணையம் அமைப்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The Madras High Court dismissed the petition filed by advocate K. Rajan seeking the constitution of an independent inquiry commission headed by a retired High Court judge....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.