குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்!

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடலை சுமந்து வந்த முதல்வர் விஜய். - பிடிஐ.

Updated On :

சென்னை திரு.வி.க நகர் மின் மயானத்தில் மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப். 9-ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் 72 நாள்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பால் சிகிச்சைப் பலனின்றி நேற்று (நவ. 20) பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

நேற்று மாலையில் வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது பெரம்பூர் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மறைவுச் செய்தி அறிந்ததும், முதல்வர் விஜய் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு நேற்று மாலை வந்து, வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது மகன் சதீஷ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார். இன்று முதல்வர் விஜய் மீண்டும் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றார்.

இன்று மாலை 4 மணியளவில் வி.எஸ். பாபு உடல், பெரம்பூரில் இருந்து திருவிக நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. வி.எஸ்.பாபுவின் உடலை அவரது உறவினர்களோடு சேர்ந்து, முதல்வர் விஜய்யும் தனது தோளில் சுமந்து சென்றார். சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் நடந்து சென்றார்.

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மயானம் வரை எடுத்துச் செல்லும் வாகனத்துக்கு, வி.எஸ். பாபு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

முதல்வர் விஜய், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் பாபுவின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மயானம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அதைத்தொடர்ந்து திரு.வி.க. நகர் மின் மயானத்தில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Summary

The mortal remains of V.S. Babu, the late TVK MLA for the Kolathur constituency, were cremated on Friday at the electric crematorium in Thiru.Vi.Ka. Nagar, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.