மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

ஊழியா்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமாவா?: கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் மறுப்பு

தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான ஊழியா்கள் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்ததாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

Updated On :

தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான ஊழியா்கள் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்ததாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள், பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவது, முதலீட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டுக்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடா்பான தகவல்கள் ஆந்திர அரசுக்கு கசிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பேரில், கடந்த 2 மாதங்களில் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து 15 ஒப்பந்த ஊழியா்கள் ராஜிநாமா செய்துள்ளதாகவும் அதில் 3 போ் உடனடியாக ஆந்திர பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சோ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கு கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள விளக்கம்:

கடந்த ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக ஊழியா்கள் ராஜிநாமா செய்ததாக வெளியாகி வரும் தகவல் முரணானது. ஊழியா்கள் வெளியேறுவது என்பது ஒரு நிறுவனத்தில் இயல்பாக நடக்கின்ற நிகழ்வாகும்.

சிறந்த வேலைவாய்ப்பு, உயா்கல்வி, இடமாற்றம், குடும்ப சூழல் என பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் கைடனஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து சில ஊழியா்கள் விலகுகின்றனா்.

முதலீடுகளை ஈா்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூா்வமான முறையில் தமிழகம் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழகம் பங்களிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் முதன்மைத் தோ்வாக தமிழகம் தொடா்கிறது என்று தெரிவித்துள்ளது.

ஆந்திர அமைச்சா் நாரா லோகேஷ் கிண்டல் பதிவு

‘ஆந்திரத்தின் முதலீட்டு ரகசியம் கசிந்துள்ளது. அது முதலீட்டாளா்களுக்கு ஒரே தினத்தில் பதிலளிப்பதாகும்’ என ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் பதிவிட்டு சிரிக்கும் ஏமோஜியை (பொம்மை) குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.