தமிழகத்துக்கான முதலீட்டு ரகசியங்களை ஆந்திரத்துக்கு கசியவிட்ட 15 பேர் பணிநீக்கம்?
தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீட்டு ரகசியங்களை வெளியிட்டதாக 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து...
முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமை - X | Guidance Tamil Nadu
தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீட்டு ரகசியங்களை ஆந்திரத்துக்கு கசியவிட்டதாக 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் சமீபமாக ஆந்திர மாநிலத்துக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தவெக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்களை ஆந்திர மாநிலத்துக்குக் கசிய விட்டதாக மாநில அரசுக்கு தொழில் முதலீடு ஆலோசனை வழங்கி வரும் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையில் (Guidance Tamilnadu) பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 15 பேரும் ஒப்பந்த முறையில் பணியாற்றியுள்ளனர். ரகசியங்களைக் காப்பது குறித்து முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையுடன் முந்தைய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசின் தொழில் ரகசியங்களைப் பதுகாக்க காப்புரிமை தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பலரையும் பணியில் சேர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன் அண்டி, ப்ரீஜா பிரசாத் ஆகிய மூவரும் உடனடியாக ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் சேர்ந்துள்ளனர். இவரள் மூவரும் ஆந்திர அரசுப் பணியில் இணைந்திருப்பதை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான பொறுப்பில் இருந்தவர்கள் உடனடியாக எப்படி ஆந்திர அரசுடன் இணைந்தார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றியபோதே ஆந்திர அரசுடன் தொடர்பில் இருந்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் தொழில் முதலீடுகள் குறித்த விவரங்கள் காரணமாக இவர்கள் மூவரையும் ஆந்திர அரசு உடனடியாக பணியில் சேர்த்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
15 people dismissed for leaking investment secrets meant for Tamil Nadu to Andhra Pradesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


