அர்னாப் புயல் சென்னைக்கு இல்லை, ஆந்திரத்துக்கு நகர்கிறது!
ஆந்திரத்துக்கு நகரும் அர்னாப் புயல் குறித்து...

புயல் சின்னம் - கோப்புப்படம்
அர்னாய் புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் இந்தப் புயல், ஆந்திரத்தை நோக்கி நகர இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்தப் புயல் சின்னம் நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அக். 26 ஆம் தேதி மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்தப் புயலுக்கு அர்னாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. அர்னாப் புயல், தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஆந்திரத்தை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் என்று பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அடுத்த 4-5 நாள்களில் உருவாகவுள்ள அர்னாப் புயல், தமிழகத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஆந்திரத்துக்கு நகரும்.
இந்தப் புயல் சென்னைக்கு இல்லை, ஆந்திர மாநிலத்துக்கு நகருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Private meteorologist Pradeep John has said that Tamil Nadu will not be affected by Cyclone Arnai and that the storm is expected to move towards Andhra Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


