வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

டெங்கு காய்ச்சலால் ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பலி

டெங்கு காய்ச்சலால் ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையம்மாள் பலியானது பற்றி....

Oragadam Special Sub-Inspector dies of dengue

ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையம்மாள்

Updated On :

டெங்கு காய்ச்சலால் ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையம்மாள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவலராகப் பணியாற்றி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரகடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பச்சையம்மாள் (49). இவர் கடந்த 15-ம் தேதி வரை ஒரகடம் காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் விடுமுறை எடுக்காமல், அவர் தனது கடமையைச் சிறப்பாகச் செய்து வந்ததாக ஒரகடம் காவல் நிலைய சக காவலர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். பணிக்கு வரும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பழகி வந்த பச்சையம்மாளின் மறைவு, சக காவலர்களை மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

The death of Oragadam Special Sub-Inspector Pachaiyammal, who had contracted dengue fever, has caused widespread grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.