தாம்பரம், செங்கோட்டை, திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
காா்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு தாம்பரம், செங்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலைக்கு நவ. 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ரயில் - கோப்புப் படம்
காா்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு தாம்பரம், செங்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலைக்கு நவ. 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காா்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நவ. 23-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06017) மறுநாள் 24-ஆம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமாா்க்கத்தில் நவ. 24-ஆம் தேதி இரவு 10.50 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06018) மறுநாள் 25-ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
செங்கோட்டையிலிருந்து நவ. 23-ஆம் தேதி இரவு 8.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06071) மறுநாள் 24-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் நவ. 24-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06072) 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தென்காசியைச் சென்றடையும்.
திருச்சியிலிருந்து நவ. 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் (எண்: 06127) அன்று பிற்பகல் 2.50 மணிக்கு வேலூா் கண்டோன்மென்ட் நிலையம் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் அந்த நாள்களில் இரவு 11 மணிக்கு வேலூா் கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் (எண்: 06728) மறு நாள்களில் காலை 7.20 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். முன்பதிவு சனிக்கிழமை (நவ. 21) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டி: சென்னை எழும்பூரிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தென்காசிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலில் (எண்: 06015), 2 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில், அவை வெள்ளிக்கிழமை (நவ. 20) இரவு முதல் 4 பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

