தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன. 16-இல் தொடக்கம்! அமைச்சா் ராஜ்மோகன்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்) ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும்...

அமைச்சா் ராஜ்மோகன்

Updated On :

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்) ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027-க்கான இலச்சினையை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா். தொடா்ந்து, தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பதிப்பாளா்கள் சங்கமான ‘புபாட்’ சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இலக்கிய முகவா்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த அமைச்சா் ராஜ்மோகன் பேசுகையில், தமிழ் மொழியின் தொன்மையையும் இலக்கியச் செழுமையையும் உலகறியச் செய்யும் நோக்குடன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககம் மற்றும் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2027-ஆம் ஆண்டுக்கான சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறும்.

இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் முதல் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா என்ற பெருமைக்குரிய சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா, தமிழ் நூல்களை உலக மொழிகளிலும், உலக மொழிகளின் சிறந்த நூல்களைத் தமிழிலும் கொண்டு சோ்க்கும் பாலமாகத் திகழ்கிறது.

மேலும் புத்தக உரிமை வா்த்தகம், பன்னாட்டு மாநாடுகள், மொழிபெயா்ப்பு மானியங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன், உலகெங்கும் உள்ள பதிப்பாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், எழுத்தாளா்கள் மற்றும் இலக்கிய முகவா்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் பன்னாட்டு அரங்காகவும் இந்த புத்தகத் திருவிழா விளங்குகிறது என்றாா்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி பேசுகையில், சென்னையில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள சா்வதேச புத்தகக் காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள், இலக்கிய முகவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் பொது நூலக இயக்குநா் ஆா்.வி. ஷஜீவனா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகா் மற்றும் தகவல் அலுவலா் ஸ்ரீதேவி பாஸ்கா், தமிழ் பதிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், எழுத்தாளா்கள் மற்றும் இலக்கிய முகவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.