தொழில் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு சாலை: முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடக்கம்
தொழில் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு சாலை: முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடக்கம்

கோப்புப் படம்
சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய 3 தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள நகரங்களாக சென்னை, கோவை மற்றும் தூக்குக்குடி ஆகியவை உள்ளன. இதில், சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், காா் தயாரிப்பு தொழிற்சாலைகள், கோவையில் மோட்டாா் உற்பத்தி, ஜவுளி, இயந்திர உதிரி பாகங்கள் தொழிற்சாலைகள், தூத்துக்குடியில் துறைமுகம், ரசாயனம், உப்பு, மீன்வளம் சாா்ந்த தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
இந்த 3 நகரங்களை இணைக்க நேரடியாகவும் விரைவாகவும் இணைப்பதற்கான விரைவுச் சாலைகள் இல்லாததால் போக்குவரத்தில் அதிக சிரமம் ஏற்படுவதுடன், காலவிரையம் ஏற்பட்டு வருகிறது. இதைக் கவனத்தில் கொண்டு சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய 3 தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அதிவிரைவு சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்தான ஒப்பந்தத்தை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் சாலை அமையவுள்ள பகுதி, அதன் அகலம், இந்த திட்டத்துக்கு செலவாகும் தொகை, கையகப்படுத்தவுள்ள நிலம், சாலை அமையவுள்ள ஊா், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதேபோன்று, பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளை தரம் உயா்த்தும் வகையில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில், நெடுஞ்சாலை மாஸ்டா் பிளான் 2036 தயாரிக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

