சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

புதுப்பொலிவுடன் தாம்பரம் ரயில் நிலையம்! எப்போது திறக்கப்படும்?

புதுப்பொலிவுடன் உருவாகிவரும் தாம்பரம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்து..

Tambaram Railway station

தாம்பரம் ரயில் நிலையம் - From X

Published On :

தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக 9 மின் தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகிவரும் நிலையில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 9 மின் தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் துரிதப்படுத்தி வருகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பயணம் செய்வோர் எளிதாக நடைமேடைகளுக்கும் மேம்பாலங்களுக்கும் சென்று வருவதற்காக இந்த வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

9 மின் தூக்கிகள் அமைக்கும் பணி

தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் வழியாக நடைமேடைகளையும் நுழைவு, வெளியேறும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 9 மின் தூக்கிகள் அமைக்கப்படுகின்றன.

Story image

மேற்கு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 2 மின் தூக்கிகளின் பணிகள் நிறைவடைந்து, உரிய உரிமச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. அவற்றைச் சென்றடைவதற்கான நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின் தூக்கிகள் விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.

நடைமேடைகள் 1 மற்றும் 2, 3 மற்றும் 4, 9 மற்றும் 10 ஆகியவற்றில் தலா ஒன்று வீதமும், கிழக்கு நுழைவு வாயிலில் 2 மின் தூக்கிகள் என மொத்தம் 5 மின் தூக்கிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவை சட்டப்பூர்வ ஆய்வு மற்றும் உரிமம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றன.

நடைமேடைகள் 5 மற்றும் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தலா ஒன்று வீதம் மேலும் 2 மின் தூக்கிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை நவம்பர் 2026 இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி

பயணிகள் நடைமேடைகளுக்கும் மேம்பாலங்களுக்கும் இடையே எளிதாகச் சென்று வருவதற்காக 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் பணியிடங்களுக்கு வந்தடைந்துள்ளன.

மேற்கு நுழைவு வாயிலில் 2 நகரும் படிக்கட்டுகளும், நடைமேடைகள் 3 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் 2 படிக்கட்டுகளும், நடைமேடைகள் 9 மற்றும் 10-ஐ இணைக்கும் வகையில் ஒரு படிக்கட்டும் என மொத்தம் 5 நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை நவம்பர் 2026 மத்திய பகுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 நகரும் படிக்கட்டுகளில், நடைமேடைகள் 1 மற்றும் 2-ஐ இணைக்கும் வகையில் ஒன்றும், நடைமேடைகள் 5 மற்றும் 6-ஐ இணைக்கும் வகையில் ஒன்றும், கிழக்கு நுழைவு வாயிலில் ஒன்றும், நடைமேடைகள் 7 மற்றும் 8-ஐ இணைக்கும் வகையில் 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளன. இவற்றை டிசம்பர் 2026 இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 மின் தூக்கிகள், 16 நகரும் படிக்கட்டுகள்

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள வசதிகளையும் சேர்த்து மொத்தம் 10 மின் தூக்கிகளும், 16 நகரும் படிக்கட்டுகளும் பயன்பாட்டில் இருக்கும்.

இதன் மூலம் நடைமேடைகள், நடை மேம்பாலங்கள் மற்றும் ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு மேம்படும். குறிப்பாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகளின் நடமாட்டம் எளிதாகும் என்றும், படிக்கட்டுகளைச் சார்ந்திருக்கும் நிலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் எளிதான அணுகல்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER