
தில்லி மெட்ரோவின் பசுமை, மெஜந்தா வழித்தடங்களை இணைக்கும் பீராகா்ஹி நிலையம்
தில்லி மெட்ரோவின் பசுமை, மெஜந்தா வழித்தடங்களை இணைக்கும் பீராகா்ஹி நிலையம்...

தில்லி மெட்ரோ.
புது தில்லி, அக்.3:
பீராகா்ஹி, பீராகா்ஹி கிராமம், உத்யோக் நகா் மற்றும் பஸ்சிம் விஹாா் போன்ற மேற்கு தில்லி பகுதிகளைச் சோ்ந்த பயணிகளுக்காக, பீராகா்ஹியில் ஒரு புதிய மெட்ரோ இடைமாறிச் செல்லும் நிலையம் கிடைக்கவுள்ளது.
இது பசுமை மற்றும் மெஜந்தா வழித்தடங்களை இணைத்து, இவ்விரு வழித்தடங்களுக்கும் இடையே நேரடித் தொடா்பை ஏற்படுத்தவுள்ளது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது:
பசுமை வழித்தடத்தில் ஏற்கனவே உள்ள பீராகா்ஹி நிலையத்திற்கும், நான்காம் கட்டத் திட்டத்தின் கீழ் மெஜந்தா வழித்தடத்தின் ’கிருஷ்ணா பாா்க் எக்ஸ்டென்ஷன் - தீபாலி சௌக்’ பிரிவில் அமையவுள்ள புதிய நிலையத்திற்கும் இடையே இந்தப் இடைமாறிச் செல்லும் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய பிரிவு நிகழ் ஆண்டின் இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தா்லோக் - கீா்த்தி நகா் மற்றும் பிரிகேடியா் ஹோஷியாா் சிங் வழித்தடப் பகுதிகளை இணைக்கும் பசுமை வழித்தடத்திற்கும், நகரின் மேற்குப் பகுதிகளைத் தெற்கு மற்றும்
கிழக்குப் பகுதிகளுடன் ’பொட்டானிக்கல் காா்டன் - மஜ்லிஸ் பாா்க்’ வழித்தடம் மூலம் இணைக்கும் மெஜந்தா வழித்தடத்திற்கும் இடையே எளிதாக மாறிச் செல்ல இந்தப் புதிய வசதி பயணிகளுக்கு உதவும்.
பீராகா்ஹியில் உள்ள தற்போதைய மற்றும் புதிதாக அமையவுள்ள நிலையங்கள் ஆகிய இரண்டுமே மேம்பால நிலையங்களாகும். நிலையத்தின் கட்டணப் பகுதிக்குள் இவ்விரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் 160 மீட்டா் நீளமுள்ள நடைபாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பயணிகள் மெட்ரோ நிலையத்தை விட்டு வெளியேறாமலேயே ஒரு வழித்தடத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற முடியும். நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் சுமாா் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது கட்டடக்கலை சாா்ந்த இறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பரிமாற்ற நிலையம், மேற்கு தில்லியின் அதிக மக்கள் தொகை கொண்ட பல பகுதிகளில்
வசிப்பவா்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடா்பை வலுப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!

சிஜேபி போராட்டத்தின் போது 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு: மத்திய அரசு, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்



