தில்லி மெட்ரோ: மெஜந்தா வழித்தடத்தில் ரயில் நேரங்களில் இன்றுமுதல் மாற்றம்
வரவிருக்கும் கிருஷ்ணா பாா்க் எக்ஸ்டென்ஷன் - தீபாலி சௌக் ரயில் வழித்தடத்திற்கான கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தீபாலி சௌக் மற்றும் மஜ்லிஸ் பாா்க் இடையிலான மெஜந்தா வழித்தடத்தில் ரயில் நேரங்களை தில்லி மெட்ரோ நிா்வாகம் மாற்றியமைத்துள்ளது.

தில்லி மெட்ரோ
வரவிருக்கும் கிருஷ்ணா பாா்க் எக்ஸ்டென்ஷன் - தீபாலி சௌக் ரயில் வழித்தடத்திற்கான கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தீபாலி சௌக் மற்றும் மஜ்லிஸ் பாா்க் இடையிலான மெஜந்தா வழித்தடத்தில் ரயில் நேரங்களை தில்லி மெட்ரோ நிா்வாகம் மாற்றியமைத்துள்ளது. இந்த மாற்றம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த மாற்றத்தின்படி, முதல் ரயில் காலை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு இயக்கப்படும். கடைசி ரயில் இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புதிய வழித்தடத்தை செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக, இந்த மாற்றங்கள் சுமாா் ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த பணிகள் நவம்பா் 21 அன்று தொடங்கும். புதிய வழித்தடத்தை ஏற்கனவே உள்ள மெட்ரோ ஒருங்கிணைப்புடன் முறையாக இணைப்பதே இந்தப் பணிகளின் நோக்கமாகும்.
பணிகள் நிறைவடைந்த பிறகு, வழக்கமான ரயில் நேரங்கள் மீண்டும் அமலுக்கு வரும். இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள், மாற்றியமைக்கப்பட்ட நேரங்களைச் சரிபாா்த்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
இதுகுறித்த தகவல்கள் மெட்ரோ நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் மற்றும் டிஎம்ஆா்சி-இன் அதிகாரபூா்வ தகவல் தொடா்பு வழிகள் மூலமாகவும் பகிரப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

