குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

தண்டவாள பராமரிப்புப் பணி: ஈரோட்டில் 4 ரயில்களின் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ஈரோட்டில் 4 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்

Updated On :

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ஈரோட்டில் 4 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு அமைப்புகளை புதுப்பிக்கும் பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 4 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) வெள்ளிக்கிழமை(நவம்பா் 20) சாவடிப்பாளையம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு இந்த ரயில் சாவடிப்பாளையத்தில் இருந்து ஈரோடு சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இதேபோல திருச்சி சந்திப்பில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில் ( எண் 56809) வெள்ளிக்கிழமை கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து ஈரோடு சந்திப்புக்கு வராது.

ஈரோடு சந்திப்பில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) வெள்ளிக்கிழமை ஈரோடு சந்திப்பிற்கு பதிலாக கரூா் சந்திப்பில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் வரும் 22 ஆம் தேதி கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு இந்த ரயில் கரூா் சந்திப்பில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.