இன்று மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊா்களுக்கு செல்பவா்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (நவ. 6) கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

Chennai Metro

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊா்களுக்கு செல்பவா்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (நவ. 6) கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (நவ. 8) முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (நவ. 6) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அந்தவகையில், பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 5 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கே தொடங்கி, இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படும். முனைய நிலையங்களிலிருந்து புறப்படும் கடைசி மெட்ரோ ரயில் நேரம் பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் வழக்கமான இரவு 11 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12 மணி வரை இயங்கும். அதேபோல், மஞ்சள் வழித்தடத்தில் வழக்கமான இரவு 9 மணிக்கு பதிலாக, இரவு 11 மணி வரை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.