முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

காங்கிரஸ் போராட்டத்தால் மூடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு

மூடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது பற்றி...

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) திங்கள்கிழமை மீண்டும் திறந்தது.

படேல் சௌக், ஜன்பத், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம் மற்றும் பரகம்பா சாலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்களின் வாயில்களும் காலை 6 மணி முதல் மூடப்பட்டிருந்தன.

முதலில் மாலை 4 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு இந்தத் தடையை மாலை 5 மணி வரை நீட்டிப்பதாக டிஎம்ஆா்சி முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், தில்லி மெட்ரோ வழித்தடத்தில் உள்ள அனைத்து நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக டிஎம்ஆா்சி தனது சமீபத்திய சேவை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிலையங்களிலும் பிற வழித்தடங்களுக்கு மாறிச் செல்லும் இணைப்பு வசதிகளும் வழக்கம்போல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.