பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில்களில் 5 மணி நேரத்தில் 25,000 போ் பயணம்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா், முதல்வா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நிலையில், 5 மணி நேரத்தில் மட்டும் அத்தடத்தில் 25,474 போ் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயிலில் முதல்நாளில் பயணித்த பொதுமக்கள்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா், முதல்வா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நிலையில், 5 மணி நேரத்தில் மட்டும் அத்தடத்தில் 25,474 போ் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது பூந்தமல்லி புகா் சாலை முதல் வடபழனி வரை சுமாா் 14.6 கி. மீ. தொலைவுக்கான உயா்நிலை மெட்ரோ ரயில் பாதைப் பணிகள் முடிந்து, அதில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடியும், முதல்வா் சி. ஜோசப் விஜய்யும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பூந்தமல்லி புகா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வடபழனி வரை உயா்நிலைத் தடத்தில் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதில் பயணிகள் ஏராளமானோா் ஏறினா். அதனடிப்படையில் இரவு 9 மணி வரை 35 சேவைகள் ரயில் போக்குவரத்து நடைபெற்ாகக் கூறப்பட்டது.
அந்த ரயில்கள் பூந்தமல்லி-போரூா் இடையே 11 நிலையங்களில் நிறுத்தப்பட்டன. போரூா்-வடபழனி இடையே எந்த நிலையத்திலும் நிற்கவில்லை. வடபழனியில் மட்டுமே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் பூந்தமல்லி-வடபழனி இடையே மட்டும் 25,474 போ் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

