சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

சென்னை வந்தார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார்?

மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தது பற்றி...

Rahul gandhi in chennai

சென்னை வந்தார் ராகுல் காந்தி - PTI

Published On :

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் வரவேற்றனர்.

சென்னை தனியார் சொகுசு விடுதியில் தங்கும் ராகுல், சென்னை தீவுத்திடலில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 10,000-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக, புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்களைச் சந்தித்து பேச உள்ளார்.

முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு?

சென்னை மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னதாக ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் செல்லவுள்ளதாகவும் அங்கு ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் சார்பில் மதிய விருந்து அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Rahul Gandhi reached chennai to attend students meet function

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER