சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

அவசர நிலையைவிட இது மோசமானது! மோடியும் பதவி விலக வேண்டும்! கேஜரிவால்

ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதானது குறித்து தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிவு....

UP court allows Arvind Kejriwal to travel abroad

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"இது அவசர நிலைக் காலத்தைவிட மோசமானது.

இது அதிகாரப்பூர்வமானது. நாம் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே 'கரப்பான் பூச்சிகளை' கைது செய்வது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

வாக்குத் திருட்டு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும். இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்குவதன் மூலம் அந்த மோசடியைப் பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; ஆனால் மோடியும் பதவி விலக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே அரவிந்த் கேஜரிவால் வீட்டின் முன்பாக தில்லி போலீஸ் குவிந்துள்ளது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

This is worse than the Emergency; Modi must also resign: Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER