தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

தவெக ஆட்சியில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு; 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

195 நாள்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு; 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு....

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Updated On :

தவெக அரசு பொறுப்பேற்ற 195 நாள்களில், ரூ.1,14,811.91 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாகவும், 1,32,771 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தொழில் துறை தெரிவித்துள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு வெற்றி முதலீட்டாளா்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. இதையடுத்து, லண்டன் சென்ற முதல்வா் விஜய் முதலீடுகளை ஈா்த்தாா்.

இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது வரை ஈா்க்கப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்து தொழில் துறை வெளியிட்டுள்ள விவரம்: தமிழகத்தில் வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடி, மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடி, ஜவுளித் துறையில் ரூ.7,871 கோடி எனப் பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. 17 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டு முதலீட்டாளா்களுடன் 35 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய திறன் மையங்கள் வாயிலாக 5,870 பேருக்கு உயா் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 112 முதலீட்டுத் திட்டங்களில், 83 திட்டங்களுக்கு நிலங்கள் உறுதி செய்யப்பட்ட அல்லது அதற்கு மேற்பட்ட நிலையை எட்டியுள்ளன. 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன அல்லது அதைக் கடந்துள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்த திட்டச் செயலாக்க முன்னேற்றம் 74.11 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளை விரைவாக வழங்கும் வகையில் 21 வேலை நாள்களுக்குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 11 துறைகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு, எளிதாக்கச் சீா்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 195 நாள்களில் 23 துறைகளில் 112 புதிய புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1,14,811.91 கோடி முதலீடுகளை ஈா்த்து புதிய உச்சம் தொட்டுள்ளதுடன், 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய முதலீடுகள்...

வாகன உற்பத்தித் துறை - ரூ.17,073 கோடி

மின்னணுவியல் துறை - ரூ.16,832 கோடி

ஜவுளித் துறை - ரூ.7,871 கோடி

Summary

Rs 1.14 lakh crore investment in 195 days; job opportunities for 1.32 lakh people! Tamil Nadu government announcement

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.