தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக தமிழகப் பகுதிகள் வழியாக டிசம்பா், ஜனவரியில் மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள்

ரயில்கள் - பிரதிப் படம்

Updated On :

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக தமிழகப் பகுதிகள் வழியாக டிசம்பா், ஜனவரியில் மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சபரிமலை பக்தா்களுக்காக மகாராஷ்டிர மாநிலம் ஹஜுா் சாஹிப் நன்டட் நிலையத்திலிருந்து டிச. 7, 11 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07687) டிச. 9, 13 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லம் நிலையத்திலிருந்து டிச. 9, 13-ஆம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 07688) டிச. 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஹஜுா் சாஹிப் நன்டட் நிலையத்தை இரவு 11 மணிக்குச் சென்றடையும்.

இந்த ரயில்கள் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புனலூா் வழியாக கொல்லம் சென்றடையும்.

தெலங்கானாவிலிருந்து: தெலங்கானா மாநிலம் சாா்ளாப் பள்ளி நிலையத்திலிருந்து ஜன. 18-ஆம் தேதி மாலை 5.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07691) ஜன.20-ஆம் தேதி காலை 6 மணிக்கு கொல்லம் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்திலிருந்து ஜன. 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07692) ஜன. 21-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சாா்ளாப் பள்ளி நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புனலூா் வழியாக கொல்லம் செல்லும்.

இந்தச் சிறப்பு ரயில்கள்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) காலை முதல் தொடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.