பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைகளுக்குத் தடை!
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு ஓமன் நாட்டில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தது குறித்து...

பறவைக் காய்ச்சல் எதிரொலி - பிரதிப் படம்
பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு ஓமன் நாட்டில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஓமன் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் இருந்து மட்டும் மாதந்தோறும் 6 கோடி முட்டைகள் ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு ஓமன் நாட்டில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், முட்டை ஏற்றுமதியாளர்கள் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஓமன் நாட்டுடன் பேசி இந்திய முட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என அரசுக்கு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து, உயிரிழந்த கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. மேலும், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
Bird flu: Oman bans eggs exported from India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

