பறவைக் காய்ச்சலிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க நாட்டின் முதல் தடுப்பூசி!
பறவைக் காய்ச்சலிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க நாட்டின் முதல் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைப் பற்றி...
கோழிகள். - (கோப்புப்படம்)
இந்தியாவில் பறவைக் காய்ச்சலிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலில் கோழிகளை பாதுகாப்பதற்காகவும், அதிக நோயுண்டாக்கும் பறவைக் காய்ச்சலின் கிளேட் 2.3.2.1ஏ வகையைச் சேர்ந்த ஹெச்5என்1 (H5N1) வகை வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இந்தத் தடுப்பூசி இன்று (நவ. 20) அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மத்தியப் பிரதேச விளையாட்டு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் போபால் பாஜக எம்.பி. அலோக் சர்மா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் 100 சதவிகிதம் இறப்பு ஏற்படுகிறது. அதனைத் தடுக்கும் விதமாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் இந்த வகை வைரஸ்களால் பறவைகள், பாலூட்டிகள், மனிதர்கள் மூவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கோழிகளிடமிருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுவதைத் தடுப்பதற்கும் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பறவைக் காய்ச்சலால் ரூ. 2,200 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
This is the first-of-its-kind vaccine developed in India against the H5N1 virus of Clade 2.3.2.1a of the highly pathogenic avian influenza.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

