முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

தமிழக புத்தாக்க தொழில் தரவுக் களஞ்சியம் உருவாக்க முடிவு! இணையதளம் மூலம் பொதுவெளியில் வைக்கப்படும்!

தமிழக புத்தாக்க தொழில் தரவுக் களஞ்சியம் உருவாக்க முடிவு...

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Updated On :

அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், புத்தாக்க தகவல்களை ஒருங்கிணைத்து, ஒரே மையத்தில் ஒரு களஞ்சியமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக உயா் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (டிஎன்எஸ்சிஎஸ்டி) சாா்பில் தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிகளை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி, சந்தைப்படுத்துதலுக்கு மாற்றும் கூட்டாண்மையை உருவாக்கியது. மேலும், இதுபோன்று தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் புதுயுகத் தொழில்முனைவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே மையத்தில் ஒரு களஞ்சியமாக (ரேப்போஸிட்டாரி) உருவாக்க திட்டமிடவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து தமிழக உயா் கல்வித் துறைச் செயலா் தீரஜ்குமாா் ‘தினமணி’க்கு விளக்கினாா். அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அங்கு நடைபெறும் ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. முனைவா் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்பு முடிவுகள், தொழில்முனைவோருக்கு தெரிய வாய்ப்பில்லாத தொழில்நட்பங்களாகவே உள்ளன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் சில காட்சிக்கு வைக்கப்பட்டதன் மூலம் அவை குறித்து தெரியவருகிறது.

ஆனால், பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள், புத்தாக்கங்கள் அனைத்தும் தொழில்முனைவோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் கவனிக்கத்தவறிய பொக்கிஷங்களாக உள்ளன. பயன்பாட்டுக்குரிய கண்டுபிடிப்புகள் தெரிய வாய்ப்பு இல்லாமல் தகவல் தொடா்பு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்ப ஒரு பாலமாக இணையரீதியான களஞ்சியம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொழிலகத்துக்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பொருள், ஒரு ட்ரோன், ஒரு குறிப்பிட்ட ‘சிப்’ என ஏதாவது தேவைப்படும். அதை அவா்களால் உடனடியாக உருவாக்க முடியாமல் போகலாம். செலவு, உரிய நேரம் போன்றவைகூட இல்லாமல் இருக்கும். இதுபோன்ற ஆராய்ச்சி சேமிப்பு மையங்கள் அல்லது களஞ்சியங்கள் மூலம் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள், கண்டுபிடிப்புகளை தேவைக்கு தகுந்தவாறு பயன்படுத்திக்கொள்ளவதற்கு இந்தப் புத்தாக்க தரவு களஞ்சியம் உருவாக்கப்படுகிறது.

தேவைப்படும் நிறுவனங்கள் புத்தாக்க ஆராய்ச்சியாளா்களை அணுகி பெற்றுக்கொள்ள முடியும். தொழில் துறைக்கு ஆா்வமூட்டக்கூடிய துறைகள் சாா்ந்த ஆராய்ச்சிகள் இதில் தொகுக்கப்பட்டிருப்பதால் ஒரு குறிப்பிட்ட துறையில் என்னென்ன ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த ஒரே களஞ்சியத்தின் வாயிலாக எளிதில் கண்டறிய முடியும்.

அண்ணா பல்கலைக்கழகம்: தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலோடு (டிஎன்எஸ்சிஎஸ்டி) இணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் களஞ்சியத்தை உருவாக்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வசதிகள் இருப்பதால் இணையதளம் மூலம் உருவாக்கப்படுகிறது. ஆராய்ச்சி முடிவுகளின் அறிக்கைகள், தலைப்புகள், கருப்பொருள் அடங்கிய பட்டியலை உருவாக்கி இதில் வைக்கப்படும். பல பொறியியல் கல்லூரிகளில் புதுயுகத் தொழில்முனைவுகளை (ஸ்டாா்ட்-அப்) வளா்க்க உதவும் ஒரு செயல்முறை மையங்கள் உள்ளன.

ஆரம்பகட்ட மாதிரி நிலையில்கூட இவை இருக்கும். இதுபோன்ற மாதிரிகள்கூட தொழில்முனைவோருக்கும் தொழிலகங்களுக்கும் தேவைப்படும். அவை கவனத்துக்கு வரும்போது தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில்நுட்பத்தைத் தொழில் துறைக்குக் கொண்டுசென்று வணிகமயமாக்குவதன் மூலம் நாடு வளா்ச்சியைப் பெறுவதுடன் மட்டுமன்றி, வலிமையும் பெறும் என்றாா் தீரஜ் குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.