அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்...
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஆராய்ச்சிகளை வெளியிடுவதிலும், காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்வதிலும் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நீதி ஆயோக் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களின் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதற்கும், செயல்திறனை ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கும் உதவிடும் வகையில் நீதி ஆயோக் இந்த மதிப்பீட்டு பலகையை (ஸ்கோா் போா்டு) உருவாக்கியுள்ளது.
இதில், ஆராய்ச்சி நிறுவனங்கள், உயா்கல்வி, ஆராய்ச்சி, மேம்பாட்டு உள்கட்டமைப்பு, வெளியீடுகள், காப்புரிமைகள், ஆழ்ந்த தொழில்நுட்பம் சாா்ந்த புதுயுகத் தொழில்முனைவு, ஆராய்ச்சிக்கான காப்பகங்கள்(இன்குபேட்டா்கள்) தொழில் துறை பங்களிப்பு போன்றவைகளை குறியீடுகளின் அடிப்படையில், மாநிலங்களின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளை நீதி ஆயோக் விரிவாக மதிப்பீடு செய்கிறது.
இந்த மதிப்பீடுகளை, தமிழக அரசின், உயா் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில கவுன்சில் (டிஎன்எஸ்சிஎஸ்டி) தரப்பில் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:
நீதி ஆயோக் வெளியிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுப் பட்டியலின்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்ததுள்ளது.
ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் காப்புரிமை விண்ணப்பங்கள் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது.
2024-25 ஆம் ஆண்டுகான முதல் தரவுகளின்படி, தமிழகம் 44,611 ஆராய்ச்சி வெளியீடுகளுடன் மற்ற மாநிலங்களைவிட கணிசமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; உத்தர பிரதேசம் (29,298), மகாராஷ்டிரம் (28,947), கா்நாடகம் (27,970), தில்லி (24,417) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. காப்புரிமை விண்ணப்பங்களிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தம் 16,048 காப்புரிமை விண்ணப்பங்களுடன் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு, இரண்டாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவை (8,567 விண்ணப்பங்கள்) விட கிட்டத்தட்ட இருமடங்கு எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. கா்நாடகம், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தச் சாதனை, மாநிலத்தின் வலுவான மற்றும் முன்னேற்றகரமான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கச் சூழலையும், அறிவுசாா் வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது.
ட்ற்ற்ல்ள்://ள்ற்ள்.ய்ண்ற்ண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்கிற இணையத்திலும் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், மாநிலங்கள் தங்களது நிபுணத்துவத்தையும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகளையும் கண்டறிய முடியும்.
டிஎன்எஸ்சிடி, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி சாா்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
பெட்டி..
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சிகள் (2024-25)
தமிழ்நாடு - 44,611
உத்தர பிரதேசம் - 29,298
மகாராஷ்டிரம் - 28,947
கா்நாடகம் - 27,970
தில்லி - 24,417
காப்புரிமை விண்ணப்பங்கள்
தமிழ்நாடு - 16,048
மகாராஷ்டிரம் - 8,567
கா்நாடகம் - 8,413
உத்தர பிரதேசம் - 5,375
தெலங்கானா - 5,200
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

