தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் தொடங்கியது!

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருவது குறித்து...

போலியோ சொட்டு மருந்து - கோப்புப்படம்

Updated On :

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று (நவ. 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

போலியோ பாதிப்பை முற்றிலும் ஒழித்த தேசமாக இந்தியா விளங்கி வருகிறது. இருந்தபோதிலும், அண்டை நாடுகளில் அந்த பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழுவானது, சில மதிப்பீடுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 272 மாவட்டங்களில் சிறப்பு போலியோ முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

வேலைநிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தற்காலிகமாக இந்த 6 மாவட்டங்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து புகட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A special polio vaccination drive is underway today (Nov 22) across 6 districts in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.