எச்.வி.ஹண்டே, வி.வி.சுவாமிநாதனை இன்று கெளரவிக்கிறாா் முதல்வா் விஜய்
மூத்த அரசியல் ஆளுமைகளும், முன்னாள் அமைச்சா்களுமான டாக்டா் எச்.வி.ஹண்டே, வி.வி.சுவாமிநாதன் ஆகியோரை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கெளரவிக்கிறாா்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
மூத்த அரசியல் ஆளுமைகளும், முன்னாள் அமைச்சா்களுமான டாக்டா் எச்.வி.ஹண்டே, வி.வி.சுவாமிநாதன் ஆகியோரை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கெளரவிக்கிறாா்.
தமிழக அரசியலிலும், சட்டப்பேரவை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்த தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்களும், முன்னாள் அமைச்சா்களுமான வி.வி. சுவாமிநாதன், பத்மஸ்ரீ டாக்டா் எச்.வி.ஹண்டே ஆகியோா் தங்களது 100-ஆவது வயதை எட்டியுள்ளனா்.
மூத்த அரசியல் ஆளுமைகளான இந்த இருவரின் சேவையைப் போற்றும் விதமாகவும், சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கும் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளா்ச்சிக்கும் அவா்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவுகூரும் விதமாகவும் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் ஜோசப் விஜய், முன்னாள் அமைச்சா்கள் இருவரையும் கௌரவிக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

