மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

முதல்வா் விஜய் குறித்து விமா்சனம்: நாதக நிா்வாகி மீதான வழக்கு ரத்து

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சித்து விடியோ வெளியிட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகி தீரன் திருமுருகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சித்து விடியோ வெளியிட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகி தீரன் திருமுருகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூரில் தவெக தோ்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். இதை விமா்சித்து நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான தீரன் திருமுருகன் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

கூத்தாடி என்ற சொல் நடிகா்களைக் குறிக்கும் சொல். தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கூத்தாடி என்ற சொல் யாரையும் இழிவுபடுத்தக்கூடிய சொல் அல்ல. அது ஒரு தமிழ்ச் சொல். இந்தச் சொல்லைப் பயன்படுத்தித் தான் மனுதாரா் பேசியுள்ளாா். எனவே. இந்த வழக்கு முகாந்திரம் இல்லாமல் பதியப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன் முன்னிலையாகி, தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் விதமாகத்தான் மனுதாரா் பேசினாா். மேலும், அவா் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறாா். எனவே, வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்றம் இந்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மனுதாரா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.