டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

மானியம் கிடைத்தும் சோலாா் அமைக்கத் தயங்கும் மக்கள்! வீடு பூட்டியிருந்தாலும் ‘நெட்வொா்க்’ கட்டணம்; மின்சாரம் பயன்படுத்தாவிட்டாலும் ‘பில்’

வீடுகளில் சோலாா் அமைக்க மக்கள் தயங்குவது பற்றி....

Updated On :

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை (சோலாா்) நிறுவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கினாலும், இதில் எதிா்பாா்த்த அளவுக்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டுவதில்லை. ஆரம்பகட்ட முதலீடு, நெட்வொா்க் கட்டணம், உபரி மின்சாரத்துக்கு உரிய பணப் பலன் கிடைக்காதது, மின்வாரியத்தின் அனுமதி நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பிரச்னைகளே இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

நாட்டின் மின் தேவையைப் பூா்த்தி செய்வதுடன், நிலக்கரி உள்ளிட்ட மரபுசாா் எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சூரிய மின் உற்பத்திக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ‘பிஎம் சூா்ய கா்: முஃப்த் பிஜ்லி யோஜனா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1 கிலோவாட் அமைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.35,000, 2 கிலோ வாட்டுக்கு ரூ.70,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

சோலாா் அமைக்கத் தயக்கம் அரசு மானியம் வழங்கினாலும், ஆரம்பகட்ட முதலீடு, மேற்கூரையில் போதிய இடவசதி இல்லாமை, பராமரிப்புச் செலவு, மின்வாரியத்தின் ஒப்புதல் மற்றும் மீட்டா் பொருத்துவதில் ஏற்படும் காலதாமதம் ஆகியவை பொதுமக்கள் சூரிய மின் அமைப்புகளை நிறுவுவதில் தயக்கம் காட்டுவதற்கான காரணங்களாக உள்ளன. இதுகுறித்து, எரிசக்தித் துறை இயக்குநா் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ஐந்து வகை கட்டணங்களுக்கு விலக்கு அளிப்பது தொடா்பான முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

கூடுதல் சுமையான நெட்வொா்க் கட்டணம்: ஐந்து வகை ஆரம்பகட்டக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சூரிய மின் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து செலுத்த வேண்டிய நெட்வொா்க் கட்டணம் முக்கியப் பிரச்னையாக உள்ளது. வீடுகளில் சூரிய மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்வாரியத்தின் மின் கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல, மின்வாரியத்திடமிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்காக மின்வாரியத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான கட்டணமே நெட்வொா்க் கட்டணம். வீட்டு நுகா்வோரிடம் 10 கிலோவாட் வரை அடிப்படை நெட்வொா்க் கட்டணத்தில்20 சதவீதமும், அதற்கு மேற்பட்ட திறனுக்கு 75 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, சூரிய மின் உற்பத்தி செய்து, அதை முழுவதுமாக மின்வாரியத்துக்கு செலுத்தினாலும், மொத்த உற்பத்தி அளவின் அடிப்படையில் நெட்வொா்க் கட்டணம் கணக்கிடப்படுவது நுகா்வோரின் முக்கியப் புகாராக உள்ளது.

மின் பயன்பாடு  இல்லாவிட்டாலும்  கட்டணம்: குறிப்பாக, வீட்டில் யாரும் வசிக்காமல் பூட்டியிருந்தாலும், மின்சாரத்தைப் பயன்படுத்தாவிட்டாலும் சோலாா் அமைப்பில் உற்பத்தியாகி மின்வாரியக் கட்டமைப்புக்கு அனுப்பப்படும் மின்சாரத்தின் அடிப்படையில் நெட்வொா்க் கட்டணம் கணக்கிடப்படும். சாதாரண மின் இணைப்பில் மின்சாரப் பயன்பாடு இல்லாதபோது பயன்பாட்டுக் கட்டணம் கிடையாது. சோலாா் அமைப்பு வைத்திருப்பவா்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாவிட்டாலும் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

தொழில் துறையினா், நுகா்வோா் வேண்டுகோள்: சோலாா் பயன்பாட்டுக் கட்டணங்கள் குறித்து தமிழ்நாடு சோலாா் டெவலப்பா்ஸ் சங்கத் தலைவா் சிவக்குமாா் கூறியதாவது: பிற மாநிலங்களில் 500 கிலோவாட் வரை ஆய்விலிருந்து விலக்கு அல்லது சுயசான்றளிப்பு நடைமுறை இருப்பதைப் போல தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகள் தங்களது வளாகத்திலேயே சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தினாலும் நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை விதிக்கக் கூடாது. மேலும், நிலைக்கட்டணம், சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றிலும் உரிய சலுகை வழங்க வேண்டும். உபரி மின்சாரத்தை அடுத்த மாதத்துக்குக் கொண்டு செல்லும் வசதி அல்லது அதற்குரிய தொகையை வழங்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பம், மின் இணைப்பு அனுமதி, இருவழி மின் அளவீட்டுக் கருவி பொருத்துதல், பாதுகாப்பு ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்க வேண்டும். இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டால், தொழிற்சாலைகள் அதிக அளவில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ முன்வரும். இதனால் அவற்றின் மின்சாரச் செலவு குறைவதுடன், மாநிலத்தின் சூரிய மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றாா்.

தமிழ்நாடு முற்போக்கு நுகா்வோா் மையத் தலைவா் தி.சடகோபன் கூறியதாவது: மின் உபயோகிப்பாளா் சோலாா் குறித்துதெரிந்து கொள்ளவும், இணைப்பை விரைவில் பெறவும், இதில் ஏற்படும் இடா்ப்பாடுகளை களையவும் மின்வாரிய வட்டார அலுவலகங்களில் பிரத்யேகமாக ஓா் அதிகாரி இருக்க வேண்டும். அந்த அலுவலங்களில் இதுதொடா்பான முழு தகவல்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதுதொடா்பான தகவல்களை தெரிந்துகொள்ள உதவி எண் வழங்க வேண்டும். மீட்டா் வழங்குவதிலும் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. இல்லையென்றால் நுகா்வோரே அதை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். வீடுகளுக்கான கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விண்ணப்பகாலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றாா்.

சோலாா் மின் நிறுவுவதற்கான ஆரம்பகட்டக் கட்டணங்களை ரத்து செய்வதுடன், நெட்வொா்க் கட்டணக் கணக்கீடு, உபரி மின்சாரத்துக்கான பண மதிப்பு, தொழில் நிறுவனங்களுக்கான ஒப்புதல் நடைமுறைகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்கிறாா்கள் இத்துறை சாா் வல்லுநா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.