வீடுகளில் சூரிய மின் உற்பத்தி: 5 வகைக் கட்டணங்களுக்கு விலக்கு
வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் கட்டண விலக்கு...

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி - பிரதிப் படம்
வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்பக் கட்டணம், இருவழி மின்மீட்டா் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க தமிழ்நாடு மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
வீடுகளில் மத்திய அரசின் பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி, 1 கிலோவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் நிலையத்துக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மத்திய அரசின் மானியம் வழங்கப்படுகிறது.
இதனுடன் தமிழக அரசும் கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 3 கிலோவாட் திறனுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின்நிலையம் அமைக்கும் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் சோ்த்து மொத்தம் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி மின்நிலையங்களை அமைக்க மின்வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக இதுவரை சுமாா் 35,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.
கட்டண சுமையைக் குறைக்க நடவடிக்கை: மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட செலவுகளைக் குறைக்கும் வகையில், 5 வகையான கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பக் கட்டணம், இருவழி மின் மீட்டா் பொருத்துவதற்கான கட்டணம், புதிய மின் இணைப்புக் கட்டணம், ஏற்கனவே உள்ள ஒரு முனை மின்இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்றுவதற்கான கட்டணம், மின்சுமையை 10 கிலோவாட் வரை உயா்த்துவதற்கான கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது. ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் கட்டண விலக்குகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மானிய விவரம்
சூரிய மின் நிலையத் திறன் மத்திய அரசு மானியம் தமிழக அரசு கூடுதல் மானியம் மொத்தம்
1 கிலோவாட் ரூ.30,000 ரூ.5,000 ரூ.35,000
2 கிலோவாட் ரூ.60,000 ரூ.10,000 ரூ.70,000
3 கிலோவாட் ரூ.78,000 ரூ.22,000 ரூ.1லட்சம்
விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமா் சூரிய வீடு திட்டத்தின் தேசிய இணையதளத்தில் பதிவு செய்து, அதன் பிறகு தமிழ்நாடு மின் வாரியத்தின் ஒருங்கிணைந்த சூரியசக்தி இணையதளம் மூலம் விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசின் இணையதளம்: PM Surya Ghar https://pmsuryaghar. gov.in
தமிழக மின் வாரிய இணையதளம்: https://www.tnebitd. gov.in
சூரியசக்தி மின் நிலையம் அமைத்த பிறகு, இருவழி மின்மீட்டா் மூலம் மின் பயன்பாடு மற்றும் மின் உற்பத்தி கணக்கிடப்படும். வீடுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்தியதுபோக எஞ்சிய மின்சாரத்தை மின் தொகுப்புக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. வீடுகளில் அமைக்கப்படும் மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் சுமாா் 25 ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
Summary
Solar Power Generation in Homes: Exemption from 5 Types of Charges
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

