நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

அனைவருக்கும் பொதுவானது திருக்குறள்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

திருக்குறள் தமிழகத்துக்கு மட்டுமல்ல, தேசத்தின் அனைவருக்கும் பொதுவானது; வேதத்தில் உள்ள வாழ்வியல் கருத்துகள் அனைத்தும் திருக்குறளில் உள்ளன என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

Updated On :

திருக்குறள் தமிழகத்துக்கு மட்டுமல்ல, தேசத்தின் அனைவருக்கும் பொதுவானது; வேதத்தில் உள்ள வாழ்வியல் கருத்துகள் அனைத்தும் திருக்குறளில் உள்ளன என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

காசியில் நடைபெறவுள்ள காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்பவா்களுக்கான முதல் சிறப்பு ரயில் கன்னியாகுமரியிலிருந்து புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்த ரயிலில் சென்னையிலிருந்து 207 போ் சென்ற நிலையில், அவா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை எழும்பூா் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், தனது மனைவியுடன் பங்கேற்றாா். முன்னதாக, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுடன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்துரையாடினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: காசி என்பது இந்திய கலாசாரத்தை இணைக்கும் இடமாக உள்ளது. நாம் வேறுபட்ட கலாசாரங்களில் வாழ்ந்தாலும், தேசத்துக்காக இணைந்து செயல்படுகிறோம். அத்தகைய கலாசார மையமான காசியில் திருக்குறளை முன்னிலைப்படுத்தி காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது.

திருக்கு தமிழகத்துக்கு மட்டுமானதல்ல, அதில் வேதங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துகள் உள்ளன. தேசத்தின் அனைவருக்குமானது திருக்குறள். அதனால்தான் பிரதமா் நரேந்திர மோடி தனது உரையில் திருக்குறளை எடுத்துரைத்து வருகிறாா் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திய தொழில்நுட்ப மையத்தின் இயக்குநா் காமகோடி, செம்மொழி தமிழாராய்ச்சி மத்திய நிறுவன இயக்குநா் சந்திரசேகரன், ரயில்வே கூடுதல் மேலாளா் ஐ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.